திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2023 (16:25 IST)

மனைவியை கைவிட்ட மோடியை ராமர் கோயில் பூஜையில் எப்படி அனுமதிக்க முடியும்? சுப்பிரமணியன் சுவாமி

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். 
 
இந்த நிலையில் மனைவியை கைவிட்ட மோடியை ராமர் கோவில் பூஜையில் எப்படி கலந்து கொள்ள அனுமதிக்க முடியும் என பாஜக பிரபலம் சுப்பிரமணியன் சாமி கேள்வி எழுப்பிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் ’ராமர் தனது மனைவி சீதையை மீட்பதற்காக ஏறக்குறைய ஒன்றரை சபாப்தங்களாக போர் செய்தவர். அப்படிப்பட்ட ராமனின் பக்தர்களாகிய நாம், மனைவியை கைவிட்ட மோடியை எப்படி ராமர் கோவில் பூஜைக்கு அனுமதிக்கலாம் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.  
 
அவரது கேள்வி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்  பாஜகவினர் சுப்பிரமணியன் சாமியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்
 
Edited by Mahendran