1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 8 ஜனவரி 2024 (10:32 IST)

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி.! துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை..!!

murder
திருவள்ளூர் அருகே குடிக்கு அடிமையான கணவனை கள்ளக்காதலுடன் சேர்ந்து துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த மனைவியால் பரபரப்பு ஏற்பட்டது.
 
திருவள்ளூர் மாவட்டம்  ஊத்துக்கோட்டை அடுத்த பென்னாலூர்  பேட்டை மேட்டுகாலனி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் 43. இவருக்கு 29 வயதுடைய மனைவி நந்தினி என்பவர் உள்ளார்.
 
இந்நிலையில் கடந்த 3ம் தேதி  வள்ளுவர்நகர் மேல்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சீனிவாசன்   மர்மமான முறையில் இறந்துகிடந்தர். அவ்வழியே சென்றவர்கள் பார்த்து உடனடியாக பென்னலூர் பேட்டை போலீசருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி திருவள்ளூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
 
இந்நிலையில்  உயிரிழந்த சீனிவாசனின் மனைவி  நந்தினிக்கும் அதே பகுதியை சேர்ந்த குமரன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது, குடிக்கு அடிமையான சீனிவாசன் நந்தினியின் கள்ளக்காதலன் குமரனிடம் மது வாங்கி கொடுக்கும் படி கேட்டுள்ளதாக தெரிகிறது.

aquest
குமரன் மது வாங்கிக் கொண்டு வள்ளுவர்நகர் மேல் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சீனிவாசனை வர வைத்து  உடன் அவரது மனைவி நந்தினியை வர வைத்துள்ளார். பின்னர் சீனிவாசனுக்கு மது ஊற்றி கொடுத்து போதை தலைக்கு ஏறியதால் சீனிவாசனுக்கும் குமரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது சீனிவாசனின் மனைவி நந்தினி மற்றும் கள்ளக்காதலன்  குமரன் ஆகிய இருவரும் சேர்ந்து ஸ்ரீனிவாசனை  நந்தினி அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தில் போட்டு தீர்த்து கட்டியுள்ளார்...
 
இந்நிலையில் தனது கணவர் மர்மமான முறையில் இருந்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உடலை அடக்கம் செய்த நிலையில், காவல்துறையினரும் மர்மமான முறையில் இருந்ததாக கூறி வழக்கை பதிவு செய்தனர்.
 
இதனிடையே பிரேத பரிசோதனை ஆய்வில் கழுத்து பகுதி இருக்கப்பட்டு இறந்ததாக தகவல் வெளியான நிலையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவியே கணவனை தீர்த்துக் கட்டிய சம்பவம் தெரியவந்தது.
 
இதை அடுத்து  நந்தினி, கள்ளக்காதலன் குமரனை கைது செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து ஊத்துக்கோட்டை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்..
 
குடிக்கு அடிமையான கணவனை கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவியை தீர்த்து கட்டிய சம்பவம் பென்னலூர்பேட்டை மற்றும் ஊத்துக்கோட்டை பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது....