திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 13 டிசம்பர் 2023 (17:50 IST)

கணவனை ஜாமினில் எடுக்க முயற்சித்த மாமியாரை கொலை செய்த மனைவி.. தஞ்சையில் பயங்கரம்

தஞ்சையில் தன்னை தாக்கி விட்டு சிறைக்கு சென்ற கணவனை மாமியார் ஜாமீனில் எடுத்த முயற்சி செய்தபோது மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சையை சேர்ந்த ஜேம்ஸ் மற்றும் பர்வீன் பானு ஆகிய இருவரும் கணவன் மனைவியாக கடந்த சில ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர். இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்ட நிலையில் ஜேம்ஸ் மனைவி பர்வீன் பானுவை தாக்கியுள்ளார்.

இதனால் பர்வீன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜேம்ஸ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தனது மகன் ஜேம்ஸை  அவரது தாய் ஆரோக்கிய மேரி ஜாமீனில் எடுக்க முயற்சி செய்தபோது மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை வந்தது.

இந்த சண்டையில் மாமியாரை அரிவாளால் மருமகள் வெட்டியதால் ரத்த வெள்ளத்தில் ஆரோக்கிய மேரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருமகளை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  
 கணவனை ஜாமினில் எடுக்கும் சண்டையால் மாமியாரை வெட்டி கொலை செய்த மருமகளால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran