வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (10:31 IST)

கடலில் விட முடியல... திமிங்கலங்களை கருணை கொலை செய்யும் அரசு!

கரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணை கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. 
 
ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக திமிங்கலங்கள் நூற்றுக்கணக்கில் கரை ஒதுங்கி வருகின்றன. அவற்றை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் பலர் அவற்றை படகுகள் மூலம் மீண்டும் கடலுக்குள் கொண்டு விடுவது, தண்ணீரை மேலே ஊற்றி ஈரப்பதத்துடன் வைத்திருப்பது போன்ற பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
 
சுமார் 500க்கும் அதிகமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில் அவை கரை ஒதுங்கியதற்கான காரணங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்த 500 கரை ஒதுங்கிய திமிங்கலங்களில் 380 திமிங்கலங்கள் உயிரிழந்துவிட்டன. 
70 திமிங்கலங்களை மட்டுமே மீட்டி கடலில் விட முடிந்தது. எனவே மீதமுள்ள திமிங்கலங்கள் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்பதால் அவற்றை கருணை கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், உயிரிழந்த 380 திமிங்கலங்களை கடற்கரையிலேயே புதைக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.