செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 10 செப்டம்பர் 2020 (11:16 IST)

கல்லூரி மாணவியோடு தலைமறைவான கணவன்… மனைவி எடுத்த முடிவால் பலியான 3 உயிர்கள்!

புதுக்கோட்டை அருகே திருமணமான ஆண் கல்லூரி மாணவி ஒருவருடன் தலைமறைவானதால் ஏற்பட்ட அவமானத்தில் மனைவி தன் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வல்லம்பக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முத்து. இவருக்கு ராதா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் முத்துவுக்கு 22 வயது கல்லூரி மாணவி ஒருவரோடு தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த ராதா கணவரோடு கடுமையாக சண்டை போட்டுள்ளார்.

இதனால் முத்து அந்த மாணவியை அழைத்துக்கொண்டு எங்கேயோ தலைமறைவாகிவிட்டார். இதனால் மனமுடைந்த ராதாவுக்கு அக்கம்பக்கத்தினரின் ஏச்சும் பேச்சும் மேலும் மன உளைச்சலை தந்துள்ளது. இதனால் தனது அறையின் கதவைத் தாழிட்டு இரண்டு மகன்கள் மேலும் தன் மேலும் மண் எண்ணேய்யை ஊற்றி கொளுத்திக் கொண்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ராதாவும் இளையமகனும் உடல் கருகி எரிந்துவிட, இளையமகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார்.
இது சம்மந்தமாக வழக்குப்பதிவு செய்த போலிஸார் முத்துவையும் அந்த மாணவியையும் தேடி வருகின்றனர்.