1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 19 ஜூலை 2018 (09:18 IST)

திருமணமான ஐந்தே நாட்களில் நடுரோட்டில் கணவரை புரட்டி எடுத்த மனைவி

கோவை கிணத்துக்கடவு பகுதியில் நடுரோட்டில் திருமணமாகி ஐந்தே நாட்கள் ஆன மனைவி ஒருவர், தனது கணவரை அடித்து உதைத்த காட்சி காண்போரை அதிர்ச்சி அடைய வைத்தது.
 
திருமணமாகி ஐந்தே நாட்கள் ஆகிய நிலையில் கணவன், மனைவி இருவரும் அருகில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது கணவர் கையில் வேறொரு பெண்ணின் பெயர் பச்சை குத்தியிருந்ததை தற்செயலாக பார்த்த மனைவி அதுகுறித்து கேள்வி கேட்டார். அப்போதுதான் அந்த இளைஞருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதும் தெரிய வந்தது
 
இதனால் தான் ஏமாற்றப்பட்டோம் என்ற ஆத்திரத்தில் நடுரோடு என்றும் பாராமல் கணவனை சரமாரியாக அடித்தார். அந்த இளைஞர் கதற கதற அந்த பெண் அடிக்கும் வீடியோ காட்சி சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
 
இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த வந்த போலீசார், இருவரையும் சமாதானம் செய்து அந்த இளைஞருக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்தால் காவல்துறையில் புகார் அளிக்கும்படி அந்த பெண்ணிடம் அறிவுறுத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது