திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 21 மே 2021 (09:16 IST)

மற்றொரு நோயாளிக்காக கணவரின் ஆக்ஸிஜன் குழாயை எடுத்து கொன்று விட்டனர்… கதறி அழுத மனைவி!

கோப்புப் படம்

கடலூரில் கொரோனாவால் சிகிச்சைப் பெற்றுவந்த நபருக்கு ஆக்ஸிஜன் குழாய் எடுக்கப்பட்டதால் அவர் உயிரிழந்ததாக மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.

கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் திட்டக்குடியைச் சேர்ந்த ராஜா என்பவர். இவருக்கு மூச்சுத்திணறல் இருந்ததால் ஆக்ஸிஜன் குழாய் மூலமாக ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆபத்தான கட்டத்தில் வந்த மற்றொரு நோயாளிக்கு ஆக்ஸிஜன் கொடுப்பதற்காக தனது கணவரின் குழாயை மருத்துவர் நீக்கிவிட்டார் என்றும் அதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கணவர் இறந்துவிட்டதாகவும் ராஜாவின் மனைவி குற்றம் சாட்டினார்.

இது சம்மந்தமாக பேசியுள்ள அரசு மருத்துவமனை இணை இயக்குனர் மருத்துவர் ரமேஷ் ‘உணவு கொடுப்பதற்காக நோயாளிகளின் ஆக்ஸிஜன் குழாய் எடுக்கப்படுவது உண்டு. அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம்’ எனக் கூறியுள்ளார்.