பாமக வைத்த மெகா விருந்தின் பின்னணி இதுதானா?
அதிமுக கூட்டணியில் இணைந்த பாமக, ஏழு மக்களவை தொகுதிகளையும் ஒரு மாநிலங்களவை தொகுதிகளையும் சுளையாக பெற்றுள்ளது. இதனால் அக்கட்சியின் நிர்வாகிகள் மகிழ்ச்சியில் இருக்கும் நிலையில் நேற்று முதல்வர் ஈபிஎஸ், துணை ஓபிஎஸ் உள்பட அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கு தைலாபுரம் தோட்டத்தில் மெகா விருந்தை பாமக நிறுவனர் ராம்தாஸ் வைத்திருந்தார்.
இந்த விருந்தில் சுமார் 80 வகையான சைவ,அசைவ உணவுகள் பரிமாறப்பட்டது. இந்த விருந்திற்கு பின்னர் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் தொகுதிகள் பிரித்து கொள்வது குறித்து ஆலோசனை செய்தனர். விரும்பிய தொகுதிகளை கேட்டு பெறுவதற்காகவே இந்த விருந்து என கூறப்படுகிறது.
இந்த ஆலோசனையின்போது பாமக விரும்பும் ஏழு தொகுதிகளின் பட்டியல் தரப்பட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் மோதும் தொகுதிகளில் பாமக போட்டியிடுவது உறுதி என தெரிகிறது.