திங்கள், 15 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 21 ஏப்ரல் 2021 (17:37 IST)

அரசியல் அட்சரம் கற்று தந்த ஆசான் கமல்: மநீகவில் இருந்து விலகிய கமீலா அறிக்கை

அரசியல் அட்சரம் கற்று தந்த ஆசான் கமல்: மநீகவில் இருந்து விலகிய கமீலா அறிக்கை
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் இன்று காலை விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் கட்சியில் இருந்து வெளியேறியதற்கு பல்வேறு வதந்திகள் சமூகவலைதளத்தில் கிளம்பின. 
 
இதனை அடுத்து தன்னிலை விளக்கம் கொடுத்து நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் இதுகுறித்து விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவதுள்
 
என் சொந்த பணிகள் காரணம் கருதி மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுகிறேன். இந்த நேரத்தில் அரசியல் கற்றுத் தந்த ஆசான், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் மற்றும் என்னுடன் சேர்ந்து பணியாற்றிய அனைவருக்கும் எனது நன்றியைச் சமர்ப்பிக்கின்றேன். 
 
என்னோடு பயணித்த கட்சி தொண்டர் அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த பயணத்தில் கிடைத்த அனுபவத்தை என் வாழ்நாள் பொக்கிஷமாக கருதி விடை பெறுகிறேன்’ என்று கூறியுள்ளார்