கொரோனாவுக்கு அமைச்சர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது ஏன்?
கொரோனாவுக்கு அமைச்சர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது ஏன் என அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் கொரோனாவுக்கு அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் எம்எல்ஏக்கள், அமைச்சர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பதவியில் இருக்கும் அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுக்காமல் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுப்பது விவாத பொருளாக மாறியது. இந்நிலையில் இது குறித்து பதில் அளித்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
அவர் கூறியதாவது, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுப்பது அவரவர் விருப்பம். எல்லா அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுப்பதில்லை. எம்.எல்.ஏ சதன்பிரபாகர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில், சிங்காநல்லூர் எம்.எல்.ஏ சென்னை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் என விளக்கம் அளித்துள்ளார்.