1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 17 ஜூலை 2020 (18:42 IST)

தமிழகத்தில் இன்று 4538 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு: அதிகபட்ச பலியானோர் எண்ணிக்கை

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 4538 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 160,907ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 4538 பேர்களில் 1243 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 83,371 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 79 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 2315 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 3,391  பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர் என்பதும் கொரோனாவால் குணமானோர் மொத்த எண்ணிக்கை 1,10,807 என்பதும் குறிப்பிடத்தக்கது மேலும் தமிழகத்தில் இன்று 48669 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை மொத்தம் 18,31,304 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது