ரஜினிக்கு ஆதரவும் கொடுக்காமல் எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருக்கும் திமுக! ஏன்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து பேசியது பேசிய விஷயத்திலும், இன்று அவர் மன்னிப்பு கேட்க முடியாது என்ற விஷயத்திலும் திமுக மௌனமாக இருப்பது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது
பெரியாரின் வழிவந்த கட்சி என்று கூறிக்கொண்டு இருக்கும் திமுக, பெரியாரை அவமதித்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ரஜினிக்கு கண்டனம் தெரிவிக்காமல் திமுக தலைவர்கள் அமைதியாக இருக்கின்றனர். ரஜினிகாந்தை கண்டித்து அறிக்கை விட்டால் இந்து மக்களுக்கு விரோதமாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் அதே நேரத்தில் ரஜினிகாந்த் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தால் தாங்கள் பெரியாரின் வழி வந்தவர்கள் என்பதை சொல்ல முடியாமல் போக வாய்ப்புள்ளது என்பதால் திமுகவின் பெருந்தலைகள் அமைதியாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமே சில சில கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் முக்கிய தலைவர்கள் இந்த விஷயத்தில் மௌனமாக இருப்பதற்கு பின்னால் அரசியல் கணக்கும் வாக்குகள் கணக்கும் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்