6 மில்லியன் வியூஸ்…விஷ்ணு விஷாலின் படம் சாதனை

பொங்கல் தினத்தில் விஷ்ணுவிஷால் படம்!
பொங்கல் தினத்தில் விஷ்ணுவிஷால் படம்!
Sinoj| Last Modified ஞாயிறு, 7 மார்ச் 2021 (16:25 IST)


ராணா மற்றும் விஷ்ணு விஷாலில் நடிப்பில் உருவாகியுள்ள படம் காடன்.
இப்படத்தில் டிரைலர் புதிய சாதனை படைத்துள்ளது.


மைனா, லீ, கும்கி, ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் பிரபு சாலமன் . இவர்
முதன்முறையாக ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் இயக்கும் திரைப்படம் காடன். தமிழில் காடன் என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் இந்தியில் “ஹாத்தி மெரெ சாத்தி” தெலுங்கில் “ஆரண்யா” என்ற பெயர்களில் வெளியாகிறது.


மூன்று மொழிகளிலும் ராணா டகுபதி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் தமிழ், தெலுங்கு வெர்சன்களில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார்.

இந்த படம் மூன்று மொழிகளிலும் மார்ச் 26 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் டிரெய்லர் கடந்த மார்ச் 4 ஆம் தேதி
வெளியானது. இந்நிலையில் இந்த டிரைலர் மூன்று நாட்களில் சுமார் 6 மில்ல்யன் பேர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகர்களின் படங்களுக்குத்தான் இந்த வரவேற்பு இருக்கும் நிலையில் காடன் படம்
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :