1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (13:01 IST)

டீசல் விலை குறைப்படாதது ஏன்??

பெட்ரோல் விலை குறைக்கப்பட்ட நிலையில் டீசல் விலை குறைப்படாதது ஏன் என நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் பதிலளித்துள்ளார். 

 
பெட்ரோல் விலை குறைக்கப்பட்ட நிலையில் இரண்டு கோடி பேர் இதனால் நேரடி பயன் பெற்று வருகின்றனர். நடத்தப்பட்ட ஆய்வின் படி ஐந்து லட்ச ரூபாய்க்கும் குறைவான வாகனங்கள் அதிகம் இருப்பதாகவும் இருசக்கர வாகனங்கள் அதிகம் இருப்பதாலும் பெட்ரோல் விலையை  ரூ.3 குறைத்துள்ளோம். 
 
டீசலை பயன்படுத்துவோரின் வாகனங்கள், 10 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரையிலானவை  இவை டீசலை பயன்படுத்தி வரும் நிலையில் டீசல் விலையை குறைப்பது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
 
மேலும் டீசல் அதிகம் பயன்படுத்தக்கூடிய போக்குவரத்து துறைக்கு மானியம் கூடுதலாக வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், மீனவர்களுக்கும் கூடுதலாக டீசல் மானியம் வழங்க முடிவு செய்து இருப்பதாகவும் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் தெரிவித்தார்.