1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 12 ஜூன் 2017 (09:16 IST)

யாரும்மா இந்த ராஜா?: தீபாவிடம் பரிதாபமாக கேட்கும் மாதவன்!

யாரும்மா இந்த ராஜா?: தீபாவிடம் பரிதாபமாக கேட்கும் மாதவன்!

நேற்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போயஸ் கார்டனில் நடத்திய களேபரம் ஒட்டுமொத்த மீடியாவையும் ஆக்ரமித்தது. தனது தம்பி தீபக்கையும், சசிகலாவையும் திட்டி தீர்த்தார்.


 
 
போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்த தன்னை உடனடியாக போயஸ் கார்டனுக்கு தீபக் அழைத்ததாகவும், இதனை சசிகலாவுடன் சேர்ந்து திட்டமிட்டு அவர் நடத்தியதாக தீபா கூறினார். ஆனால் போயஸ் கார்டன் வந்த என்னை பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் உள்ளே விடாமல் தாக்கியதாக தீபா குற்றம் சாட்டினார்.
 
இந்நிலையில் போயஸ் கார்டனுக்கு வெளியே தீபா தனது தம்பி தீபக்கை சரமாரியாக வசைபாடினார். அப்போது தீபக் அங்கு வர தீபா அவரிடம் தன்னை ஏன் வர சொன்னாய், நீ தான் வர சொன்னதை எல்லார் முன்னாடியும் சொல் என கொந்தளிக்கிறார்.
 
பின்னர் ராஜாவிற்கு ஏன் போன் போட்டாய் என தீபா கேட்க, எனக்கு ராஜா யார் என்றே தெரியாது என தீபக் ஒரே போடாக போட்டார். இதனால் கொந்தளித்த தீபா பொய் சொல்லாதே, நீ நல்லாவே இருக்க மாட்ட அழிஞ்சுபோய்விடுவ என்றார். இதனை அமைதியாக வேடிக்கை பார்த்த தீபாவின் கணவர் மாதவன், யாரும்மா அந்த ராஜா என பரிதாபமாக கேட்கிறார்.
 
அப்போது ராஜா அங்கே வர தீபக் உன்னை யாரென்றே தெரியாது என்கிறான். உனக்கு அவன் போன் பண்ணான்ல என தீபா கேட்கிறார். இதனை தீபாவின் கணவர் மாதவன் தனது செல்போனில் வீடியோ பிடித்ததால் ராஜா மாதவனை மிரட்டுகிறார், திட்டுகிறார். ஆனால் தீபா அமைதியாக எதுவும் கண்டுக்கல.
 
அப்போது மீண்டும் அங்கு வந்த தீபக்கிடம் ராஜா யாரென்று தெரியாதா இவர பார்த்து சொல்லு என கூற, ராஜாவும் தீபக்கிடம் ஏன் அப்படி சொன்னாய் என கேட்டார். உடனே என்னை மன்னிச்சிடுங்க என கூறிவிட்டு தீபக் காரில் ஏறி புறப்பட்டுவிட்டார். இதனையடுத்து தீபா தனது தம்பி தீபக்கை எச்சக்கல என திட்டித்தீர்த்தார்.