புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : சனி, 28 செப்டம்பர் 2019 (13:54 IST)

விஜய்க்கு எதிராக யார் பேசினாலும் கவலையில்லை - எஸ்.ஏ. சந்திரசேகர்

விஜய் - அட்லி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்ட விஜய் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினாலும் மத்தியில் மாநிலத்திலும் ஆளும் கட்சிகளை மறைமுகமாக சாடியது விவாதப் பொருளாகியது.
இந்நிலையில்,   பிகில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்ற தனியார் பொறியியல் கல்லூரிக்கு உயர்கல்வித்துறை அனுப்பியுள்ள  நோட்டீஸை திரும்பப் பெறவேண்டுமென காங்கிரஸ் தரப்பில்  வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
இதனைத்தொடர்ந்து, இன்று நாகர்கோவில் வந்த பிரபல இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான  எஸ். ஏ. சந்திரசேகர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது :
 
’’சமூக சிந்தனையோடு சில கருத்துகளை தெரிவிக்கிறோம். இதற்க்காக விஜய்யின் படத்துக்கு எதிர்ப்புகள் வருமென நாங்கள் நினைக்கவில்லை. நடிகர் விஜய் ஜனநாயக நாட்டின் குடிமகன் என்ற முறையில் சுபஸ்ரீயின் மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார். அதனால் பிகில் படத்தை வெளியிடுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று தெரிவித்தார்.
 
மேலும், தமிழக அரசு திரைத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவது வரவேற்கத்தக்கது’’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.