1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 மார்ச் 2023 (15:39 IST)

வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உரிமைத் தொகை கிடையாதா? – முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

MK Stalin
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 திட்டம் அமலாக உள்ள நிலையில் யாருக்கெல்லாம் இந்த திட்டத்தில் நிதியுதவி கிடைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

திமுக அரசு அமைந்தது முதலாக தமிழ்நாட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருந்த திட்டம் மாதம்தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம். நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த உதவித்தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

அதன்படி, குடும்பத் தலைவிகளுக்கு நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 மாதம்தோறும் செலுத்தப்படும்.

மீனவப் பெண்கள், சாலையோர கடை வைத்திருக்கும் பெண்களுக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்கும்.

கட்டுமான பணிகளில் ஈடுபடும் பெண்கள், சிறுகடைகள், சிறுதொழில் நிறுவனங்களில் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்க்கும் பெண்களுக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்கும்.

ஒரு நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் பணி செய்யும் பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்.

மொத்தமாக ஒரு கோடி குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 மாதம் வழங்கப்பட உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

பல்வேறு வகைகளில் விலை மதிப்பில்லாத உழைப்பை வழங்கும் பெண்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

ஆனால் எந்த கூலி வேலைக்கும், பணிக்கும் செல்லாமல் வீடுகளில் உள்ள பெண்களுக்கு உரிமைத்தொகை குறித்த விவரங்கள் தெரிய வரவில்லை.

Edit by Prasanth.K