1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 29 ஜனவரி 2019 (12:04 IST)

95 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டார்களா? உண்மை நிலவரம் என்ன? விளாசிய தினகரன்

உண்மையிலே 95 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டர்களா என அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களின் பணியிடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு அந்த இடத்திற்கு தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்திருந்தது.
 
சற்றுமுன்னர்  பள்ளி கல்வித்துறை  அதிகாரி  95 சதவீத உயர்நிலை மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர் என தெரிவித்தார்.

 
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் , உண்மையிலேயே 95 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டர்களா, உண்மை நிலவரம் என்ன. ஏன் ஊடகங்கள் உண்மை நிலவரத்தை தெரிந்துகொள்ளாமல் இப்படிபட்ட செய்தியை வெளியிடுகிறீர்கள். இன்னும் பல ஊர்களில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அரசு ஆசிரியர்களை அழைத்து அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதை விட்டுவிட்டு அதிகார பலத்தை காண்பித்து அவர்களை நசுக்க பார்க்கக்கூடாது என தினகரன் பேசினார்.