1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 5 ஜூன் 2020 (07:15 IST)

காற்றில் பறக்கவிடப்பட்ட கட்டுப்பாடுகள்: நெல்லை பேருந்துகளில் பயணிகள் கூட்டம்

காற்றில் பறக்கவிடப்பட்ட கட்டுப்பாடுகள்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தில் பேருந்துகள் ஓடாமல் இருந்த நிலையில் ஒரு சில நிபந்தனைகளுடன் ஜூன் 1ம் தேதி முதல் தமிழகத்தில் சென்னை உள்பட நான்கு மாவட்டங்கள் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் பேருந்துகள் இயங்குகின்றன
 
நிர்வாக வசதிக்காக 8 மண்டலங்களாக போக்குவரத்து கழகங்கள் பிரிக்கப்பட்டு 50 சதவீத பேருந்துகளை இயக்கப்படுவதாகவும், 60 சதவீத பணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன 
 
இந்த நிலையில் இந்த கட்டுப்பாடுகள் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கடைபிடிக்கப்பட்டு வந்தபோதிலும், பல பகுதிகளில் கடைபிடிக்கப் படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக நெல்லை மண்டலங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் அரசின் கட்டுப்பாடுகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடபட்டதாகவும் ஒரு பேருந்துகளில் 80 பயணிகள் பயணம் செய்து வருவதாகவும் குறிப்பாக படிக்கட்டுகளில் பயணம் செய்து வருவதாகவும் புகைப்படத்துடன் கூடிய செய்திகள் சமூக வளைதளத்தில் வந்து கொண்டிருக்கின்றன
 
அரசின் கட்டுப்பாடுகளை மீறி பேருந்துகளில் பயணம் செய்வது கொரோனா வைரஸை தேடிவரவழைத்து கொள்வதற்கு சமம் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். எனவே பேருந்துகளில் செல்ல வேண்டிய அவசியம் இருந்தாலும் அரசின் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது