திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 6 அக்டோபர் 2022 (13:20 IST)

ஆங்கிலேயர் காலத்தில் வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் எங்கே? சீமான் கேள்வி

seeman
ஆங்கிலேயர் காலத்தில் வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் எங்கே? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
55 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் சமூகநீதி ஆட்சிக்காலத்தில்தான் பெருமளவு பஞ்சமி நிலங்கள் ஆதித்தமிழ்க்குடி மக்களை ஏமாற்றி முறைகேடாக அபகரிக்கப்பட்டது
 
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அன்றைய சென்னை மாகாணத்தில் வாழ்ந்த ஆதித்தமிழ்க்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட 12 இலட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் எங்கே? பஞ்சமி நிலங்களை மீட்பதற்காக தமிழ்நாடு அரசு அமைத்த குழுக்கள் என்னவானது?
 
பஞ்சமி நிலங்கள் மீட்பது தொடர்பாக ஏற்கனவே ஆண்டவர்களும், இப்போது ஆள்பவர்களும், அவர்களுக்குத் துணை நிற்பவர்களும் வாய் திறக்க மறுப்பது ஏன்? பஞ்சமி நிலங்களை மீட்டு ஆதித்தமிழ்க்குடி மக்களிடம் அளிக்கும் போராட்டத்தை விரைவில் நாம் தமிழர் கட்சி தொடங்கும். இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்தார்.
 

Edited by Mahendran