ரஜினி எப்போது கட்சி தொடங்குவார் ? சத்தியநாராயண ராவ் பதில் : ரஜினி மழுப்பல்

rajini
Last Modified ஞாயிறு, 10 மார்ச் 2019 (12:42 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தடபுடலாக பிரசாரம் செய்து வருகின்றனர். இதில் தேசியக் கட்சியினர், மாநில கட்சியினர் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க இருக்கின்றனர்.கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்து விருப்ப மனுக்கள் பெற்றார். இதில் 1000 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதாக விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று அவருடைய மக்கள் நீதி கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம்  ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில் கமலின் நண்பரான  ரஜினி தனது அரசியல் வருகையை அறிவித்து ஒருவருடம் ஆகிவிட்டது. இந்நிலையில் அவரது அரசியல்  வருகையை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்துள்ளனர். ஆனால் அவர் அடுத்தடுத்து சினிமாவில் பிஸியாகிவிடார்.
 
இந்நிலையில் இதுபற்றி ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணன் கிருஷ்ணகிரியில் கூறியதாவது:
sathyanarayana rovc
ரஜினி கட்சி தொடங்குவது பற்றி மக்களவை தேர்தலுக்கு பின் தெரிவிக்கப்படும். ரஜினி கண்டிப்பாக அரசியலுக்காக வருவார் .அது உறுதி. என்று தெரிவித்தார்.
 
சென்னை விமான நிலையத்தில் ரஜினி செய்தியாளர்களிடம் கூறிதாவது:
rajini
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை :யாருக்கும் ஆதரவில்லை. அதேபோல் வரவிருக்கிற 21 தொகுதி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :