வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 5 பிப்ரவரி 2024 (16:59 IST)

ஆளுநருடன் மோதலா..? அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில்..!

rajakannapan
ஆளுநருடன் எவ்வித முரண்பாடும் இல்லை என்றும் துறை ரீதியாக இணைந்து செயல்பட தயார் என்றும் உயிர் கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
 
சென்னையில் செய்தியாளரிடம் பேசிய அவர், ஆளுநருக்கு அரசுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்றார். அவரு, அவர் வேலையை பார்க்கிறார் என்றும் நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
வருகிற 12-ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்ற இருப்பதாகவும், தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து முறைப்படி நடந்து வருவதாகவும் கூறினார்.

 
அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் அங்கு அவர் பதில் அளிப்பார் என்றும் தெரிவித்தார். ஆளுநர் கூறும் அரசியல் ரீதியான கருத்துக்களை  ஏற்க தமிழக அரசு தயாராக இல்லை என்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் குறிப்பிட்டார்.