பள்ளிகள் திறப்பு எப்போது ? முதல்வர் பழனிசாமி ஆலோசனை
சீனாவில் இருந்து பரவியுள்ள கொரோனா வைரஸால் பல நாடுகள் பாதிப்படைந்துள்ளன. இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை பாதிப்பைக் குறைக்க வரும் ஜூன் ஆம் தேதி வரை ஊரடங்கு சில தளர்வுகளுடம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கல்வி நிலையங்கள், பள்ளிகள் திறப்பது எப்போது என்று பலரும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.