ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2024 (14:47 IST)

மயிலாடுதுறை வேட்பாளர் அறிவிப்பு எப்போது? செல்வப்பெருந்தகை விளக்கம்..!

Selvaperandagai
மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் இன்று மாலை அறிவிக்கப்படுவார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
 
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் மயிலாடுதுறை தொகுதியை தவிர அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை தொகுதியை கேட்டு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருவதால் வேட்பாளரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.
 
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் இன்று மாலை அறிவிக்கப்பட்டு நாளை வேட்பு மனு தாக்கல் செய்வார் என தெரிவித்தார். மேலும் மக்களவை தேர்தலில் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
 
கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி அளித்த  வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும் தமிழகத்தை ஆளும் தோழமைக் கட்சியான திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 90 விழுக்காடு நிறைவேற்றி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 
தேர்தல் பிரச்சாரத்திற்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருகை தர உள்ளதாகவும், ஓரிரு நாளில் தேதி வெளியிடப்படும் என்றும் செல்வப்பெருந்தகை கூறினார்.