ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (20:37 IST)

நகைகடன் தள்ளுபடியில் நிறைய முறைகேடு: அமைச்சர் பெரியசாமி பேட்டி

நகை கடன் வழங்குதல் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் அந்த முறைகேடுகள் சரி செய்யப்பட்ட உடன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அமைச்சர் பெரியசாமி பேட்டியளித்துள்ளார்
 
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நகை கடன் தள்ளுபடி செய்வது குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் இன்று மதுரை விமான நிலையத்தில் பேட்டி அளித்த அமைச்சர் பெரியசாமி அவர்கள் நகை கடன் தள்ளுபடியில் நிறைய முறைகேடு நடைபெற்றுள்ளது என்றும் தேர்தல் காலத்தில் கூறும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்  தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
நகைக் கடனில் உள்ள முறைகேடுகள் சரி செய்யப்பட்ட உடன் கண்டிப்பாக நகை கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்