1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 7 செப்டம்பர் 2023 (17:57 IST)

சனாதன தர்மம் குறித்து கவியரசர் கண்ணதாசன் என்ன சொல்லியுள்ளார்?

kannadasan
கடந்த சில நாட்களாக சனாதனம் தர்மம் குறித்த சர்ச்சை எழுந்து வருகிறது என்பதும் சனாதனத்தை ஒழிப்போம் என திமுகவும் சனாதனத்தை காப்பாற்றுவோம் என பாஜகவும் கூறி வருகிறது. 
 
இந்த நிலையில் கவியரசு கண்ணதாசன் தனது அர்த்தமுள்ள இந்துமதம் என்ற புத்தகத்தில் சனாதனம் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.  அவை பின்வருமாறு:
 
சனாதன தர்மம் என்பது சமஸ்கிருத சொல்லாகும். இந்த சொல்லிற்கு நிலையான தத்துவஞானம், நிலையான நம்பிக்கை, அசைக்க முடியாத நித்திய சட்டம், மரியாதைக்குரிய ஒழுங்கு முறை என பல விதமான பொருள்கள் சொல்லப்படுகிறது. 
 
சனாதன தர்மம் என்பது, அனைவருக்கும் பொதுவான கடமை மற்றும் ஒரு ஆன்மிக அடையாளமாகும். அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துதல், சேவை செய்தல், தொன்மையானது, நிலையான நெறிமுறைகளைக் கொண்டது என்பதே சனாதன தர்மமாகும்.
 
Edited by Mahendran