திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 7 செப்டம்பர் 2023 (14:23 IST)

ரொம்ப தெளிவா பேசியிருக்கார்.. உதயநிதியைப் பாராட்டிய சத்யராஜ்!

சமீபத்தில் நடந்த மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி சனாதனத்தை ஒழிப்போம் எனக் கூறியது சர்ச்சைகளைக் கிளப்பியது. வட இந்தியாவில் இது சம்மந்தமாக உதயநிதி மேல் போலீஸ் புகார்கள் அளிக்கப்பட்டன.

அதுமட்டுமில்லாமல் இந்துத்வ சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் தலையைக் கொண்டுவருபவருக்கு 10 கோடி ரூபாய் அளிக்கப்படும் எனக் கூறி மேலும் பரபரப்பைக் கூட்டினார்.  

இதையடுத்து தமிழ்நாட்டில் உதயநிதிக்கு பல அரசியல் கட்சிகளிடம் இருந்தும் பிரபலங்களிடம் இருந்து ஆதரவுகள் குவிந்து வருகின்றன.  திரைப்பட இயக்குனர்கள் பா ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இப்போது மூத்த நடிகரான சத்யராஜ் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

அவரது பேச்சில் “சனாதனம் குறித்து மிக தெளிவாக பேசியிருந்தார் உதயநிதி ஸ்டாலின். அவரின் கருத்தியல் தெளிவு பெருமையாக உள்ளது. அவருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.