ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பால் வீட்டுக் கடன் வட்டி குறையும்.. மகிழ்ச்சியான செய்தி..!
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அவர்கள் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
நிதி ஆண்டின் ஐந்தாவது இரு மாத நாணய கொள்கை குழு கூட்டம் டிசம்பர் 3 முதல் 5 வரை நடைபெற்றது. நாணய கொள்கை குழு ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 5.25 சதவீதமாக நிர்ணயிக்க ஒருமனதாக முடிவெடுத்துள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருவதன் காரணமாக, மத்திய வங்கி கடந்த பிப்ரவரி மாதம் முதல் மூன்று கட்டங்களாக ரெப்போ வட்டி விகிதத்தை ஏற்கெனவே 100 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ரெப்போ விகித குறைப்பால், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறும் கடன் மீதான வட்டி குறையும். இதனால், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வீட்டு கடன்கள் உட்பட அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதமும் குறையும் வாய்ப்புள்ளது. இது பொதுமக்களுக்கு ஒரு பெரிய மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.
Edited by Mahendran