1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 27 ஏப்ரல் 2023 (22:05 IST)

தமிழகத்தில் இன்று கொரொனா பாதிப்பு எவ்வளவு?

corono
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரொனா பாதிப்பு குறித்து தமிழகத்தில் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்,  சில நாட்களாக அதிகரித்த கொரொனா படிப்படியாக குறைது வருகிறது. இத்தொற்றைக் குறைக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், மருத்துவ வசாதிகள் தயார் நிலையிலிருப்பதாகவும் கூறினார்.

இந்த நிலையில், இன்று தமிழகத்தில் கொரொனா தொற்றால் பாதிப்பட்டோரின் எண்ணிக்கை 382 என்று தகவல் வெளியாகிறது.   நேற்று 421 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.