திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 27 ஏப்ரல் 2023 (18:20 IST)

கன்னியாகுமரி - தாம்பரம் இடையே கோடைக்கால சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Train
பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கி விட்டதை அடுத்து சுற்றுலா செல்பவர்களுக்கு வசதியாக அவ்வப்போது தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் கன்னியாகுமாரி முதல் சென்னை தாம்பரம் வரையிலான கோடைகால சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மே ஒன்றாம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தாம்பரம் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகவும் இந்த ரயில் கன்னியாகுமரியில் 7.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஆன்லைனில் தற்போது தொடங்கியுள்ளது என்றும் இந்த ரயிலை தேவையானவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran