வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Updated : வெள்ளி, 12 ஜூலை 2019 (16:10 IST)

விதிமுறைகளை மீறிய இங்கிலாந்து வீரர்: அபராதம் விதித்த ஐசிசி

ஐசிசி விதிமுறையை மீறியதற்காக, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் ஜேசன் ராய்க்கு, ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில், அபாரமாக விளையாடிய இங்கிலாந்து அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று இறுதிச் சுற்றில் நுழைந்தது.

இதனிடைய நேற்றைய போட்டியில், இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய், 85 ரன்கள் குவித்து எதிர்பாராதவிதமாக ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர் கம்மின்ஸ், வீசிய பந்து, லெக் சைடு வந்தபோது அதை ராய் அடிக்க முயன்றார். ஆனால் பந்து பேட்டில் படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது. கீப்பர் பந்தை பிடித்தவுடன், அம்பயரிடம் ஆஸ்திரெலிய வீரர்கள் அப்பீல் கேட்டனர்.

அந்த அப்பீலை ஏற்றுகொண்ட அம்பயர், ஜேசன் ராய் ’அவுட்’ என அறிவித்தார். இதனால் மிகவும் கோபமடைந்த ஜேசன் ராய், அம்பையரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஜேசன் ராயின் இந்த நடத்தையால், ஐசிசி அவருக்கு விதிமுறைகளை மீறியதாக கூறி அபராதம் விதித்துள்ளது. அவருக்கு இரு அபராத புள்ளிகளுடன், ஊதியத்திலிருந்து 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் ஜேசன் ராய், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஒரு அபராத புள்ளியை பெற்றோர். இத்துடன் அவர் உலக கோப்பை போட்டிகளில் 4 அபராத புள்ளிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.