1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 22 நவம்பர் 2018 (18:16 IST)

தமிழக ஆளுநர் செய்த காரியம் ! வைரலாகும் வீடியோ...

திருவாருர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்தார்.அவருடன் அமைச்சர் காமராஜ், ஆட்சியர் நிர்மல்ராஜ் உடன் இருந்தனர்.
அப்போது அருள்ஜோதி என்ற பெண் தன் வீடு வாசல்களை இழந்து பள்ளியில் தங்கி இருப்பதாகவும் தனக்கு நிவாரணம் எதுவும் கிடைக்காத நிலையை கூறி கதறி அழுதார்.
 
ஆளுநர் உடனடியாக அந்த பெண்ணின் கண்ணீரைத் துடைத்து நடவடிக்கை எடுக்க உத்தவிட்டார். இது அங்குள்ளோரை நெகிழ்ச்சி அடையச் செய்தது.