செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 4 அக்டோபர் 2024 (14:34 IST)

இன்னும் சில மணி நேரங்களில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!

Chennai Rain
இன்னும் சில மணி நேரங்களில், தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக, சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், வடக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதை அடுத்து, தமிழகம் உள்பட சில மாநிலங்களில் மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணிக்கு மேல் மிதமான மழை முதல் கனமழை வரையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.


Edited by Siva