இன்றும் நாளையும் தமிழகத்தில் கொட்டப்போகுது கனமழை: வானிலை அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி..!
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாலத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கச் சுழற்சி நிலை உயர்வடைந்ததின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும், நாளை ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Mahendran