திங்கள், 23 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 22 டிசம்பர் 2018 (16:43 IST)

மழை வருமா? வராதா?; மழைக்கான அறிகுறி இருக்கா? இல்லையா?: வெதர் அப்டேட்

நேற்று முதல் தமிழகத்தின் டெல்டா பகுதிகளிலும், சென்னை மற்றும் கடலோர பகுதிகளிலும் மழை பொழியும் என தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மழை வருமா? வராதா? மழைக்கான அறிகுறி இருக்கா? இல்லையா? என பார்ப்போம்.  
 
தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் வெளியிட்டுள்ள வெதர் அப்டேட் பின்வருமாறு, வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்று சுழற்சி இலங்கையிக்கு திரிகோணமலைக்கு வடக்கே நிலை கொண்டுள்ளது. இது நேற்றைய நிலவரத்தைவிட சற்று நீண்டுள்ளது. 
 
இந்த காற்று சுழற்சி நாளை (டிசம்பர் 23) கொழும்பு அருகே மன்னார்வளைகுடா, இந்தியப்பெருங்கடல் இணையும் இடத்தில் இறங்கும் போது வரும். இதனால் தமிழகத்துக்கு கூடுதல் மழை பெய்யும்.
 
இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் வட தமிழக பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக சென்னையை பொறுத்தவரை நாளை காலை முதல் மழை பெய்யும். விட்டு விட்டு பெய்யும். ஓரிரு முறை கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.