வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 25 பிப்ரவரி 2019 (19:45 IST)

10 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்துவிடுவோம்: புதிய கட்சி ஆரம்பித்த இயக்குனர் பேட்டி!

திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்பட பல அரசியல்வாதிகள் பல ஆண்டுகள் அரசியலில் இருந்தும் இன்னும் அவர்களது கனவான முதல்வர் பதவியை அடைய முடியவில்லை. ஆனால் இன்று புதிய கட்சியை ஆரம்பித்துள்ள இயக்குனர் கவுதமன், அடுத்த 10 ஆண்டுகளில் ஆட்சியியை பிடித்து முதல்வராகிவிடுவேன் என்று கூறியுள்ளார்.
 
'தமிழ்ப் பேரரசு கட்சி' என்ற புதிய கட்சியை இன்று தொடங்கியுள்ள இயக்குனர் கவுதமன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, 'தான் ஒரு சிறு அமைப்பாக, இயக்கமாக இருந்து போராட்டிய போராட்டம் அரசின் காதுகளை எட்டவில்லை என்றும் அதனால் கட்சி ஆரம்பித்து போராட முடிவு செய்ததாக கூறினார்
 
அரசியல் என்ற ஆயுதத்தை வைத்து தமிழ் இனத்தை வேரறுத்து வருபவர்களை எதிர்க்கவே அதே அரசியல் ஆயுதத்தை கையிலெடுத்துள்ளதாகவும், தமிழ் இனத்தின் எதிரிகள் எமனாக இருந்தாலும் அவர்களை துணிச்சலுடன் எதிர்த்து போராடுவோம் என்றும் இயக்குனர் கவுதமன் கூறியுள்ளார்.
 
மேலும் வரும் சட்டமன்ற தொகுதியில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு 25 தொகுதிகளில் வெல்வோம் என்றும் அடுத்த பத்து ஆண்டில் ஆட்சியை பிடிப்பதே தங்களுடைய லட்சியம் என்றும் கவுதமன் மேலும் கூறியுள்ளார்.