ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 8 மே 2022 (09:06 IST)

லூலு மால் நிறுவனத்தின் ஒரு செங்கலை கூட அனுமதிக்க மாட்டோம்: அண்ணாமலை

annamalai
தமிழகத்தின் லூலு  மால் அந்நிறுவனத்தின் ஒரு செங்கலை கூட அனுமதிக்க மாட்டோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சமீபத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் துபாய் சென்று இருந்தபோது தமிழகத்திலும் லூலு மால் அமைப்பது குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் 
இதனை அடுத்து விரைவில் தமிழகத்தில் லூலு மால் அமைக்க இருப்பதாக செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் தமிழகத்தில் லூலு நிறுவனம் ஒரு செங்கலை வைக்கக்கூட பாஜக அனுமதிக்காது என்றும் சாலையோர வியாபாரிகள் சிறு வியாபாரிகளை பாதிக்கும் நிறுவனத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது