திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 2 மே 2022 (19:45 IST)

தமிழக மீனவர்களை யாழ்பாண சிறையில் சந்தித்தேன்- அண்ணாமலை

அண்டை நாடான இலங்கைக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அங்கு இந்தியாவின்  நிதியுதவியில் தமிழார்களுக்குக் கட்டப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டார்.

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  பதுளை மாவட்டம் அப்புத்தளை தங்கமலை தோட்டத்தில் இந்தியாவின் நிதியுதவியில் கட்டுப்பட்டுள்ள வீடுகளைப் பார்வையிட்டார்.

அவருக்குப் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கபப்ட்ட பின் அவர் மேடையில் மக்களிடையே உரையாற்றினார்.  அப்போது அவர் கூறியதாவது: இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேவரத்தைச் சேர்ந்த 12 தமிழக   மீன்வர்களை இன்று யாழ்பாண சிறையில் சந்தித்தேன். தமிழக பாஜக சார்பில் அவர்களுக்கு உடை, உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.  இந்த மீனவர்கள் விரைவில் தமிழகத்திற்கு வந்துவிடுவர் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், எந்த  மீனவரும் இலங்கை கடற்பரப்புக்குள் வருவதில்லை. எதோ தவறால் வருகின்றனர். இது குறித்து உரிய கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.