1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 30 ஏப்ரல் 2022 (10:22 IST)

இலங்கை கிளம்பிய அண்ணாமலை: எதற்கு தெரியுமா?

இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலையை அறிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அந்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

 
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்றுமதி, இறக்குமதி கடும் பாதிப்பை கண்டுள்ளது. மக்கள் உணவு பொருட்களுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து மக்கள் பலர் படகுகள் வழியாக தமிழகம் தப்பி வருவது அதிகரித்துள்ளது.
 
இந்நிலையில் இலங்கைக்கு இந்திய அரசு பொருளுதவி மற்றும் கடனுதவியும் செய்து வருகிறது. இருந்தாலும் தமிழ்நாடு அரசு அங்குள்ள இலங்கை தமிழர்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்குவதற்காக மத்திய அரசின் அனுமதியை கோரியிருந்தது.
 
இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசிய பொருட்களை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதி அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  
 
இதனைத்தொடர்ந்து இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலையை அறிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அந்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டில் வசிக்கும் தமிழர்களை நேரில் சந்தித்து, அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிய உள்ளார்.