1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 20 ஜூலை 2025 (10:49 IST)

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல.. ஈபிஎஸ் ஆவேச பேச்சு..!

Edappadi vs Stalin
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று திருத்துறைப்பூண்டியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது எடப்பாடி பழனிசாமி  பேசியதாவது: 
 
அதிமுக அதிக இடங்களை வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். "எங்களுக்குக் கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும், வேண்டாம் என்றால் வேண்டாம். எதைப் பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை.
 
"ஸ்டாலினைப் போல வாரிசுக்காக ஆட்சிக்கு நான் வர நினைக்கவில்லை. மக்கள் விருப்பத்திற்காகத்தான் நாங்கள் ஆட்சிக்கு வர விரும்புகிறோம். திமுக ஆட்சியை அகற்ற நினைக்கிறவர்கள் அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும்
 
இன்னும் சில கட்சிகள் அதிமுகவுடன் இணையவுள்ளது. சரியான நேரத்தில் திமுகவுக்கு "மரண அடி" கொடுப்போம். "200 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் எங்கள் கனவு, ஆனால் நிஜத்தில் 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்" என்று எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையுடன் கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva