ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (15:28 IST)

பெட்ரோலில் தண்ணீர்: அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

ஏற்கனவே பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விண்ணை முட்டி உள்ள நிலையில் தற்போது பெட்ரோலில் தண்ணீர் கலப்படம் செய்வதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் கலக்கம் அடைந்தனர். அனைவரும் இன்னும் ஒரு சில வருடங்களில் சைக்கிளுக்கு மாறுவதற்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் 100 ரூபாய்க்கு மேல் பெட்ரோல் போட்டு வரும் நிலையில் பெட்ரோலில் தண்ணீர் கலந்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
தருமபுரி மாவட்டம், தடங்கம் பகுதியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இங்கு வாடிக்கையாளர் ஒருவர் குடிநீர் கேனில் பெட்ரோல் வாங்கியுள்ளார். அப்போது, பெட்ரோலில் தண்ணீர் கலந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.