புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 நவம்பர் 2021 (19:47 IST)

தண்ணீரும் யானையும் அதன் பாதையை மறந்துவிடாது: பொறியாளர் சுந்தர்ராஜன்,

தண்ணீரும் யானையும் அதன் பாதையை மறந்துவிடாது: பொறியாளர் சுந்தர்ராஜன்,
தண்ணீரும் யானையும் அதன் பாதையை மறந்து விடாது என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் பொறியாளர் சுந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னையில் பெய்த கனமழை காரணமாக ஏரியை ஆக்கிரமித்து கட்டிய கட்டடங்கள் வெள்ளத்தால் சூழ்ந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் பொறியாளர் சுந்தரராஜன் அவர்கள் கூறியபோது ’தண்ணீரும் யானையும் ஒன்றுதான். அதன் பாதைகளை மறந்துவிடாது.
 
தாத்தா பாட்டி மூதாதைகள் பயன்படுத்திய பாதைகளை யானைகள் எப்போதும் மறக்காது அதே போல் நீரும். இங்கு வேளச்சேரி ஏரியை ஆக்கிரமித்து வீடு கட்டினால் தண்ணீர் அதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருக்காது. அதன் பாதையை நினைவு வைத்து வந்து விடும் என்று தெரிவித்துள்ளார்
 
அவர் சொல்வது எவ்வளவு பெரிய உண்மை என்பது தற்போது வெள்ளத்தில் தெரியவருகிறது