1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 1 நவம்பர் 2021 (14:04 IST)

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ‘யானை’: விரைவில் ரிலீஸ் தேதி!

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் யானை. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் அதன்பிறகு இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
 
அருண்விஜய், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் அல்லது டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று தீபாவளி அன்று வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
யோகிபாபு, பிரகாஷ்ராஜ், ராதிகா, அம்மு அபிராமி உள்பட பலர் நடித்து வரும் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார் என்பதும், இந்த படத்தை டிரம்ஸ்டிக் புரடொக்சன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது