வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 14 ஜூலை 2016 (19:05 IST)

அபகரிப்பு வழக்கு தொடர்பாக திமுக எம்.எல்.ஏ.வுக்கு பிடிவாரண்ட்

திருப்பூரில் காகித ஆலை அபகரிப்பு வழக்கு தொடர்பாக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
 

 
கடந்த 2011 ஆம் ஆண்டு கோவையை சேர்ந்த சீனிவாசன் என்பவர், திருப்பூர் மாவட்டம், உடுமலையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள காகித ஆலையை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
 
அதன் உரிமையாளர் கிங்ஸ்லி என்பவர் தனது சொத்துடன், தனது சகோதரரின் பாகத்தையும் அவருக்கு தெரியாமல் ஒப்பந்தத்தில் சேர்த்துள்ளார்.
 
பத்திரப் பதிவு செய்யும்போது பிரச்சினை ஏற்பட, அதனை திமுக பிரமுகர்களிடம் முறையீடு செய்துள்ளனர். அப்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் சீனிவாசனை மிரட்டி காகித ஆலையை அபகரித்துள்ளனர்.
 
இதுதொடர்பாக உடுமலை நில அபகரிப்புப் பிரிவு காவல் துறையினரிடம் சீனிவாசன் புகார் அளித்தார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
 
இந்த வழக்கு திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக எம்.எல்.ஏ. அன்பழகனுக்கு பிடியாணை பிறப்பித்து நீதிபதி திரு.ஜெகந்நாதன் உத்தரவிட்டார்.