திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 30 ஜூன் 2018 (08:55 IST)

நடிகர் ஆர்யாவுக்கு பிடிவாரண்ட்: அம்பாசமுத்திரம் நீதிமன்றம் அதிரடி

கடந்த 2011ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால், ஜனனி ஐயர் நடித்த 'அவன் இவன்' திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்த சர்ச்சைக்குரிய வசனம் இருப்பதாக கூறி இந்த படத்தில் நடித்த ஆர்யா மற்றும் இயக்குனர் பாலாவுக்கு எதிராக நெல்லை மாவட்டம்  அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
 
இந்த வழக்கின் விசாரணை பலமுறை நடந்த போதிலும் ஆர்யா, பாலா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நேற்றும் ஆர்யா, பாலா ஆஜராகவில்லை
 
இதனையடுத்து நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்றம் நடிகர் ஆர்யா, இயக்குனர் பாலா ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது