1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 24 டிசம்பர் 2021 (18:28 IST)

சத்துணவு முட்டைகளில் புழு: நடவடிக்கை எடுக்கப்படுமா?

சத்துணவு முட்டைகளில் புழு: நடவடிக்கை எடுக்கப்படுமா?
சத்துணவு முட்டைகளில் புழு இருந்ததாக கூறப்பட்டு வருவதை அடுத்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
கரூர் மாவட்டம் நாகனூர் என்ற பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவு முட்டைகளில் புழு இருந்ததாகக் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி வரும் நிலையில் இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது 
 
குறிப்பாக தரமற்ற முட்டைகளை விநியோகம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்களின் சார்பில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளதால் இதுகுறித்து பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.