ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (09:12 IST)

கொரோனா பாதித்தவர்கள் வெளியே செல்கிறார்களா? கூகுள் மேப் மூலம் கண்காணிக்கும் வார் ரூம்!

கொரோனா பாதித்தவர்கள் வெளியே செல்கிறார்களா? கூகுள் மேப் மூலம் கண்காணிக்கும் வார் ரூம்!
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தி கொண்டு வீட்டிலேயே இருக்கிறார்களா அல்லது வெளியே செல்கிறார்களா என்பதை கண்காணிக்க கூகுள் மேப் மூலம் வார் ரூம் அதிகாரிகள் கண்காணிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் கண்டிப்பாக நெகட்டிவ் ரிசல்ட் வரும்வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் அதையும் மீறி ஒரு சிலர் தனிமைப்படுத்துதல் இருந்து வெளியே செல்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் கொரோனா அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கொரோனா பாதிக்கப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன் எங்கெல்லாம் சென்றார்கள் என்பதை கூகுள் மேப் மூலம் கண்டறியும் பணிகளை காவல்துறையின் மூலம் கண்காணித்து வருவதாக சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர்களுக்கு கொரோனா பரவியது எப்படி, எங்கே என்பதையும் தெரிந்தது கொள்ளலாம். அதேபோல் அவர்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும் கண்காணிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்