தடுப்பூசி போட்டுவிட்டால் எத்தனை அலைகள் வந்தாலும் கவலையில்லை: மருத்துவ நிபுணர்கள்!
தடுப்பூசி போட்டுவிட்டால் எத்தனை அலைகள் வந்தாலும் கவலையில்லை: மருத்துவ நிபுணர்கள்!
கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டு விட்டால் எத்தனை அலைகள் வந்தாலும் பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
இந்தியா உள்பட உலகம் முழுவதும் தற்போது இரண்டாவது அலை வீசி வருகிறது. இதனை அடுத்து ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை மூன்றாவது அலை இந்தியாவில் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஒரு சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து அங்கு மூன்றாவது அலை பரவியதாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு தனிமனித இடைவெளியை கடைபிடித்து மாஸ்க் அணிந்து வெளியே சென்றால் மூன்றாவது அலை மட்டுமல்ல எத்தனை அலைகள் வந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை என மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்
எனவே பொதுமக்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டு தங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறு மருத்துவ நிபுணர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்