வோட்டர் ஐடி இல்லை என்றாலும் வாக்களிக்கலாம்?? எப்படி??
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் எந்தெந்த ஆவணங்களை வைத்து வாக்களிக்கலாம் என பார்க்கலாம்.
தமிழகத்தில் வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து வாக்காளர் அட்டை இல்லை என்றாலும் தகுந்த ஆவணங்களை வைத்து வாக்களிக்கலாம்.
ஆதார் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பொதுத்துறை வங்கிகளின் கணக்கு அட்டை, அஞ்சல் அலுவலகங்களின் கணக்கு அட்டை, பான் கார்டு, ஸ்மார்ட் கார்டு, தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான அடையாள அட்டை, மருத்துவ காப்பீட்டிற்கான அடையாள அட்டை, ஓய்வூதிய ஆவணங்கள் (புகைப்படத்துடன் கூடிய), அரசு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தங்களின் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.