1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (08:52 IST)

அஜித் ரசிகர்களுக்கு நற்செய்தி..

அஜித் ரசிகர்களுக்கு நற்செய்தி! சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் விவேகம். 

 
இதில் அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் கலவையான விமர்சனங்களை சந்தித்த போதும், நல்ல வசூலை ஈட்டியது. இந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 
 
தற்போது கன்னட மொழியில் டப்பிங் செய்யப்பட்டு உள்ளது. கன்னட விவேகம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள அஜித் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.